Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் 'லீக்' சென்னை மாஸ் ரைடர்ஸ் தகுதி

புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் 'லீக்' சென்னை மாஸ் ரைடர்ஸ் தகுதி

புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் 'லீக்' சென்னை மாஸ் ரைடர்ஸ் தகுதி

புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் 'லீக்' சென்னை மாஸ் ரைடர்ஸ் தகுதி

ADDED : ஜூன் 26, 2024 01:05 AM


Google News
சென்னை, புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் 'லீக்' போட்டியில், சென்னை மாஸ் ரைடர்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

சென்னையில், 'தீ புளூ ஸ்கை கிரிக்கெட்' அகாடமி சார்பில், புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் லீக் போட்டிகள் நடக்கின்றன. இவற்றில், ஒன்பது அணிகள் பங்கேற்று, தலா ஒவ்வொரு அணிகளும் எட்டு போட்டிகள் வீதம் 'லீக்' முறையில் மோதின.

அதைத் தொடர்ந்து 'நாக் அவுட்' போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சேத்துப்பட்டுஎம்.சி.சி., பள்ளியில் கடைசி நாக் அவுட் போட்டியில், சென்னை மாஸ் ரைடர்ஸ் சி.சி., மற்றும் மேகி சி.சி., அணிகள் எதிர்கொண்டன.

'டாஸ்' வென்ற சென்னை மாஸ் ரைடர்ஸ் அணி, முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து, 181 ரன்கள் எடுத்தது. அணியின் வீரர் கார்த்திக், 55 பந்துகளில், 11 பவுண்டரியுடன், 75 ரன்கள் அடித்தார்.

அடுத்து களமிறங்கிய மேகி சி.சி., அணி, 17 ஓவர்களில், 95 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. சென்னை மாஸ் ரைடர்ஸ் அணியின் வீரர் சாய் பிரகாஷ், நான்கு ஓவர்கள் பந்து வீசி, ஐந்து விக்கெட் எடுத்து, 11 ரன்களை மட்டுமே கொடுத்தார். மற்றொரு வீரர் பரதம், நான்கு ஓவர்கள் வீசி, நான்கு விக்கெட் எடுத்து, 18 ரன்களை கொடுத்தார்.

இதனால், 86 ரன்களை வித்தியாசத்தில், சென்னை மாஸ் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us