/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பைக் திருடிய நபர் செங்கல்பட்டில் கைது பைக் திருடிய நபர் செங்கல்பட்டில் கைது
பைக் திருடிய நபர் செங்கல்பட்டில் கைது
பைக் திருடிய நபர் செங்கல்பட்டில் கைது
பைக் திருடிய நபர் செங்கல்பட்டில் கைது
ADDED : ஜூன் 06, 2024 11:16 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் உணவகம் அருகில், நேற்று காலை நிறுத்தப்பட்டு இருந்த 'ஹூரோ ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தின் பூட்டை, வாலிபர் ஒருவர் உடைத்துக்கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட பொது மக்கள், அந்த நபரை மடக்கி பிடித்து, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர், சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ், 33, என்பது தெரிய வந்தது.
செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், தனியாக நிறுத்தப்பட்டு உள்ள இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, இருசக்கர வாகனத்தின் உரிமையாளரான மணப்பாக்கம் பகுதியை சேர்ந்த குட்டி, 43, என்பவர் அளித்த புகாரின்படி, போலீசார் ரமேஷை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.