/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலையில் பீர் பாட்டில் உடைப்பு தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் சாலையில் பீர் பாட்டில் உடைப்பு தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்
சாலையில் பீர் பாட்டில் உடைப்பு தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்
சாலையில் பீர் பாட்டில் உடைப்பு தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்
சாலையில் பீர் பாட்டில் உடைப்பு தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்
ADDED : ஜூலை 22, 2024 07:02 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் மீனவ பகுதி ஒற்றைவாடைத் தெருவில், நேற்று காலை 7:00 மணிக்கு, காரணையைச் சேர்ந்த தமிழ் சக்கரவர்த்தி, 27, கடற்கரைக்கு சென்றார்.
அப்போது, சாலையில் நின்றிருந்த வாலிபர்கள் சிலர், பீர் பாட்டிலை சாலையில் உடைத்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த தமிழ் சக்கரவர்த்தி, அவர்களை தட்டிக்கேட்டார்.
அதனால் கோபமடைந்த அவர்கள், தமிழ் சக்கரவர்த்தியை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர், மாமல்லபுரம் போலீசில், அவர் புகார் அளித்தார்.
இது தொடர்பாக, காட்டாங்கொளத்துார் தனியார் சட்டக்கல்லுாரி மாணவர்கள், ரிஷிகேஷ், 25, பிரவின்குமார், 30, அதீப் அகமது, 23, பாரதி, 24, சென்னை, தனியார் கல்லுாரி மாணவர் அபூல் பைஸ், 24, மதுரை, தனியார் கல்லுாரி மாணவர் முகமது அப்ரியூ, 20, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.