/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தண்டலத்தில் அரசு நிலம் ஆக்கிரமிக்க முயற்சி தண்டலத்தில் அரசு நிலம் ஆக்கிரமிக்க முயற்சி
தண்டலத்தில் அரசு நிலம் ஆக்கிரமிக்க முயற்சி
தண்டலத்தில் அரசு நிலம் ஆக்கிரமிக்க முயற்சி
தண்டலத்தில் அரசு நிலம் ஆக்கிரமிக்க முயற்சி
ADDED : ஜூலை 15, 2024 05:50 AM

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த தண்டலம் ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் அண்ணாநகர் சாலை இணைப்பு பகுதி அருகே, தனிநபருக்கு சொந்தமான பட்டா இடம் உள்ளது. அந்த இடத்தை ஒட்டி, பாட்டை வகைப்பாட்டை சார்ந்த அரசு நிலமும் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியினர் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். அதை தொடர்ந்து, வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றினர்.
தற்போது, தனிநபர் பட்டா இடத்தை ஒட்டியுள்ள பாட்டை வகைப்பாட்டை சார்ந்த அரசு நிலம் காலியாக உள்ளது.
இந்த காலி நிலத்தை தனிநபர் ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளதாக கூறியும், ஏற்கனவே நாங்கள் பயன்படுத்திய அரசு இடத்தை மீண்டும் எங்கள் பகுதி மக்களே பயன்படுத்துவோம் எனக் கூறியும், அப்பகுதியை சேர்ந்த சிலர், நேற்று காலை அரசு இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதன்பின், அந்த இடத்திலிருந்து சில முட்செடிகளை அகற்றிவிட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் வெள்ளை கோடு எல்லையும் அமைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு காணப்பட்டது.