/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அரசு இடத்தில் சாலை அமைக்க முயற்சி பூயிலுப்பை தனியார் மனை பிரிவுக்கு எதிர்ப்பு அரசு இடத்தில் சாலை அமைக்க முயற்சி பூயிலுப்பை தனியார் மனை பிரிவுக்கு எதிர்ப்பு
அரசு இடத்தில் சாலை அமைக்க முயற்சி பூயிலுப்பை தனியார் மனை பிரிவுக்கு எதிர்ப்பு
அரசு இடத்தில் சாலை அமைக்க முயற்சி பூயிலுப்பை தனியார் மனை பிரிவுக்கு எதிர்ப்பு
அரசு இடத்தில் சாலை அமைக்க முயற்சி பூயிலுப்பை தனியார் மனை பிரிவுக்கு எதிர்ப்பு
ADDED : ஜூன் 07, 2024 01:46 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் ஊராட்சி, பூயிலுப்பை கிராமத்தில் தனியார் மனைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மனைப் பிரிவுக்கு பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எனினும், இச்சாலை அமைக்கும் பணி குறிப்பிட்ட அளவு அரசு மற்றும் விவசாயப் பணிக்கு பயன்படுத்தப்படும் பாதை நிலம், வியாபாரப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுவதாக, நேற்று அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர், தற்காலிகமாக சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
தனியார் மனைப் பிரிவினர், அரசு இடத்தில் சாலை அமைக்க, ஒரு அடி உயரத்தில் ஜல்லிக்கற்கள் கொட்டி பணி நடைபெற்றது.
இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தோம். அதன்பின், இங்கு நேரடியாக வந்த வருவாய்த் துறை அதிகாரிகள், அரசு இடத்தில் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இங்கு சாலை அமைக்கும் பணியை நிறுத்தியதோடு விடாமல், கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள், வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். தனியார் மனைப்பிரிவு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில மாதங்களுக்கு முன், இப்பகுதிகளில் உள்ள அரசு இடங்களில் வருவாய்த் துறையினர் தடுப்பு வேலி அமைத்தனர். ஆனால், மேற்கண்ட மனைப்பிரிவு அருகே உள்ள அரசு இடத்தில் மட்டும் தடுப்பு வேலி அமைக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மேற்கண்ட பகுதி அரசு நிலத்தில், தனியார் மனைப்பிரிவினர் சாலை அமைப்பதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில், உத்தேசமாக 20 மீட்டர் துாரம் அரசு சார்ந்த நிலம் வருகிறது. அரசு சார்ந்த இடத்தில் சாலை அமைப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, சாலை அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளோம். ஆனால், தனியார் மனைப்பிரிவினர் வாய்வழியாக ஊராட்சி அனுமதி பெற்று சாலை அமைப்பதாகக் கூறினர். ஆனால், அதன் ஆதாரமாக ஏதும் எங்களிடம் தரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.