/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஊராட்சி தலைவி மீது தாக்குதல்; கடலுார் கிராமத்தில் பதற்றம் ஊராட்சி தலைவி மீது தாக்குதல்; கடலுார் கிராமத்தில் பதற்றம்
ஊராட்சி தலைவி மீது தாக்குதல்; கடலுார் கிராமத்தில் பதற்றம்
ஊராட்சி தலைவி மீது தாக்குதல்; கடலுார் கிராமத்தில் பதற்றம்
ஊராட்சி தலைவி மீது தாக்குதல்; கடலுார் கிராமத்தில் பதற்றம்
ADDED : ஜூலை 07, 2024 11:23 PM

கடலுார் : கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சி தலைவி ஆதிலட்சுமி, 42. இவரது கணவர் ஞானவேல், 52. கடலுார் பெரியகுப்பத்தை சேர்ந்த மீனவர்கள்.
இங்குள்ள எல்லையம்மன், வெங்கட்டம்மன் கோவிலில், கடந்த மே மாதம் நடந்த உற்சவத்தில், இப்பகுதி மீனவ சபையினர், ஞானவேல் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
புறக்கணிப்பு
இதற்கிடையே, ஊராட்சி நிர்வாகம் சார்பில், அப்துல் கலாம் குறுக்குத் தெருவில் சாலை அமைக்க ஏற்பாடான நிலையில், தனியார் இட சிக்கல் உள்ளதாக கூறி, அங்கு சாலை அமைக்க வேண்டாம் என, ஒரு தரப்பினர் எதிர்த்து, ஊராட்சி தலைவி ஆதிலட்சுமியை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, பிறரிடம் கடன் வாங்கி, திருப்பி கொடுக்காதது குறித்து, ஞானவேலிடம் மீனவ சபையினர் விசாரித்து உள்ளனர். ஆனால், அவர்களுக்கு பதில் சொல்லாமல், ஞானவேல் புறக்கணித்துள்ளார்.
இந்நிலையில், தாக்குதல் முயற்சி குறித்து, கூவத்துார் போலீசில் அளித்த புகாரை, ஆதிலட்சுமி திரும்ப பெற்றார்.
மீனவ சபையினரை மீறி, போலீசில் புகார் அளித்ததற்காக, அவரது குடும்பத்திற்கு சபையினர் ஊர் கட்டுப்பாடு விதித்தனர். அவர்களுடன், ஊரில் உள்ளோர் தொடர்புகொள்ளவும் தடை விதித்தனர்.
இச்சூழலில், கடந்த 2ம் தேதி, ஆதிலட்சுமி மற்றும் ஞானவேலின் சகோதரர் சேகர் குடும்பத்தினரை, எதிர் தரப்பினர் தாக்கியுள்ளனர். இருவரின் வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
போலீஸ் கண்காணிப்பு
இதில், ஐந்து பேர் காயமடைந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நேற்று முன்தினம் வீடு திரும்பினர்.
இது தொடர்பாக, ஆதிலட்சுமி புகாரின்படி, மீனவ சபையினர் உள்ளிட்ட 22 பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அதனால், கடலுார் மீனவ கிராமத்தில் பதற்றத்தை தணிக்க, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.