/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 10ம் வகுப்பில் நுாறு சதவீதம் ஆசிரியர்களுக்கு பாராட்டு 10ம் வகுப்பில் நுாறு சதவீதம் ஆசிரியர்களுக்கு பாராட்டு
10ம் வகுப்பில் நுாறு சதவீதம் ஆசிரியர்களுக்கு பாராட்டு
10ம் வகுப்பில் நுாறு சதவீதம் ஆசிரியர்களுக்கு பாராட்டு
10ம் வகுப்பில் நுாறு சதவீதம் ஆசிரியர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 08, 2024 12:09 AM

செங்கல்பட்டு:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும், நுாறு சதவீதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு, பாராட்டு சான்றிதழ்களை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று வழங்கினார்.
செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம் கல்வி மாவட்டங்களில், 114 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். கடந்த மாதம், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில், பத்தாம் வகுப்பு பாடப்பிரிவுகளில், நுாறு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற வைத்த, 475 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்று, 475 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். இதில், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், முதன்மை கல்வி அலுலரின் நேர்முக உதவியாளர்கள் உதயகுமார், சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.