/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பறிமுதல் வாகனங்களை ஏலம் விட எதிர்பார்ப்பு பறிமுதல் வாகனங்களை ஏலம் விட எதிர்பார்ப்பு
பறிமுதல் வாகனங்களை ஏலம் விட எதிர்பார்ப்பு
பறிமுதல் வாகனங்களை ஏலம் விட எதிர்பார்ப்பு
பறிமுதல் வாகனங்களை ஏலம் விட எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 20, 2024 12:30 AM

மதுராந்தகம்:சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம், அய்யனார் கோவில் சந்திப்பு அருகே, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது.
மதுராந்தகம் மற்றும் செய்யூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதி மக்கள், இங்கு பல்வேறு ஆவணங்களை சரி செய்யவும், கோரிக்கை மனுக்களை அளிக்கவும் தினசரி வந்து செல்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, மணல் திருட்டில் ஈடுபட்டு,வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகள் மற்றும் டாடா ஏஸ் வண்டிகள், ஆர்.டி.ஓ., அலுவலக வளாகப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், புதர்கள் வளர்ந்து, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் புகலிடமாக இவ்வளாகம் திகழ்கிறது.
எனவே, மணல் திருட்டில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, பொது ஏலம் விட வேண்டும் என, அப் பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.