/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செய்யூரில் அரசு வாகனம் பாழ் பொது ஏலம் விட எதிர்பார்ப்பு செய்யூரில் அரசு வாகனம் பாழ் பொது ஏலம் விட எதிர்பார்ப்பு
செய்யூரில் அரசு வாகனம் பாழ் பொது ஏலம் விட எதிர்பார்ப்பு
செய்யூரில் அரசு வாகனம் பாழ் பொது ஏலம் விட எதிர்பார்ப்பு
செய்யூரில் அரசு வாகனம் பாழ் பொது ஏலம் விட எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 12, 2024 01:32 AM

செய்யூர்:செய்யூர் தாசில்தார்அலுவலகத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தாருக்கு, 15 ஆண்டுகளுக்கு முன் புதிய ஜீப் வழங்கப்பட்டது.
அரசு அலுவலகங்கள், கணக்கெடுப்பு, முகாம்கள் உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு செல்ல, இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள்,சராசரியாக 10 ஆண்டு அல்லது 2.5 லட்சம் கி.மீ.,ஓடினால், அவை காலாவதிஎன, ஒதுக்கி வைக்கப்பட்டு வருகிறது.
அதே போல, இந்த வாகனமும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்டு, தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பொதுக்கழிப்பறை அருகே நிறுத்தப்பட்டது.
தற்போது வரை வாகனம் அகற்றப்படாமல், ஒரே இடத்தில் காட்சிப்பொருளாக இருப்பதால், வெயிலிலும், மழையிலும் பாழாகி வருகிறது.
ஆகையால், துறை சார்ந்த அரசு அதிகாரிகள், வாகனத்தை பொது ஏலம் விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.