/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ படூர் சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர் அவசியம் படூர் சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர் அவசியம்
படூர் சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர் அவசியம்
படூர் சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர் அவசியம்
படூர் சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர் அவசியம்
ADDED : ஜூன் 18, 2024 05:24 AM
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்குகிறது. படூர், ஆனம்பாக்கம், சிறுமயிலுார், சித்தாலப்பாக்கம், மதுார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நோயாளிகள் மற்றும் கர்ப்பிணியர் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
நாளொன்றுக்கு 150 - 300 பேர் வரை சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்தில், ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளதால், நோயாளிகளுக்கு போதுமான சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.
மருத்துவர் விடுமுறை எடுக்கும் நாட்களில், செவிலியர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். மேலும், இந்த சுகாதார நிலையத்தில் ஆய்வக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதால், குருமஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக உதவியாளர் சுழற்சி அடிப்படையில் இங்கு வந்து பணியாற்றும் நிலை உள்ளது.
இதுகுறித்து, படூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த சில நோயாளிகள் கூறியதாவது:
காய்ச்சல், சளி, மூச்சு திணறல் என, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்கு வருகிறோம். சில நேரங்களில் இங்கு வந்த பின், மருத்து வருக்கு விடுமுறைஎன்கின்றனர்.
இதனால், அச்சமயம் உடல்நிலை குறித்து பரிசோதிக்க முடியாமல், செவிலியர்கள் அளித்திடும் மருந்து, மாத்திரைகளை வாங்கி செல்கிறோம்.
இது போதுமான சிகிச்சையாக இல்லை. எனவே, படூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, கூடுதலாக மருத்துவர் நியமிப்பதோடு, காலியாக உள்ள ஆய்வக பணியாளர் பணி இடம் நிரப்ப நடவடிக்கை வேண்டும்,
இவ்வாறு, அவர்கள் கூறினர்.