/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மழைநீர் கால்வாய் அமைக்க ரூ.11.37 கோடி ஒதுக்கீடு மழைநீர் கால்வாய் அமைக்க ரூ.11.37 கோடி ஒதுக்கீடு
மழைநீர் கால்வாய் அமைக்க ரூ.11.37 கோடி ஒதுக்கீடு
மழைநீர் கால்வாய் அமைக்க ரூ.11.37 கோடி ஒதுக்கீடு
மழைநீர் கால்வாய் அமைக்க ரூ.11.37 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 21, 2024 07:26 AM

செங்கல்பட்டு : புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியத்தில், இரண்டு கிராமங்களில் மழைநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகள் செய்ய, 11 கோடியே 37 லட்சம் ரூபாயை, அமைச்சர் சேகர்பாபு, கூடுதல் கலெக்டர் அனாமிகாவிடம் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பொழிச்சாலுார், கவுல் பஜார் ஆகிய கிராமங்களில் மழைநீர் கால்வாய், சாலைகள், பூங்காக்கள் அமைக்க, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும திட்ட நிதியிலிருந்து, 11 கோடிய 37 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த நிதியை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவரும், ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி கூடுதல் கலெக்டர் அனாமிகாவிடம், சென்னையில், நேற்று முன்தினம் வழங்கினார்.
இதில், நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.