/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கை நீரேற்று நிலைய பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு செங்கை நீரேற்று நிலைய பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு
செங்கை நீரேற்று நிலைய பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு
செங்கை நீரேற்று நிலைய பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு
செங்கை நீரேற்று நிலைய பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 31, 2024 04:31 AM
செங்கல்பட்டு : மாமண்டூர் தலைமை நீரேற்றும் நிலையத்தில், பராமரிப்பு பணி செய்ய, 23.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
செங்கல்பட்டு நகராட்சிக்கு, மாமண்டூர் பாலாற்றில் தலைமை நீரேற்றும் நிலையம் உள்ளது. அங்கு, இரண்டு நீர் உறிஞ்சுகிணறுகள் மற்றும் 11ஆழ்துளை கிணறுகள்உள்ளன.
பாலாற்றின் படுகையிலிருந்து தரைமட்ட தொட்டி, ஒரு லட்சம்லிட்டர் கொள்ளளவு குடிநீர் தொட்டி உள்ளது. 60 எச்.பி., திறன்கொண்ட மின் மோட்டார் மற்றும்மின்தடை காலங்களில் ஜெனரேட்டர் இயக்கப் படுகிறது.
குடிநீரில் குளோரின்அளவு சரியாக கலக்க, பணியாளர்களைகொண்டு செயல்படுத்தப்படுகிறது.
இங்கு, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, 2024- - 25ம் ஆண்டில், ஓராண்டு வரை பணி மேற்கொள்ள, 23.10 ரூபாய் செலவு செய்ய, நகரசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுநிறைவேற்றப்பட்டது.