/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 8 மாதமாக எரியாத விளக்குகள் பூரியம்பாக்கத்தில் குற்றச்சாட்டு 8 மாதமாக எரியாத விளக்குகள் பூரியம்பாக்கத்தில் குற்றச்சாட்டு
8 மாதமாக எரியாத விளக்குகள் பூரியம்பாக்கத்தில் குற்றச்சாட்டு
8 மாதமாக எரியாத விளக்குகள் பூரியம்பாக்கத்தில் குற்றச்சாட்டு
8 மாதமாக எரியாத விளக்குகள் பூரியம்பாக்கத்தில் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 20, 2024 05:54 AM
சித்தாமூர் : சித்தாமூர் அடுத்த பூரியம்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஊராட்சி சார்பாக தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த எட்டு மாதங்களாக, ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தெரு விளக்கு எரிவதில்லை.
குடியிருப்புப் பகுதிக்கு அருகே மலை மற்றும் காட்டுப்பகுதி உள்ளதால், இரவு நேரத்தில் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாகவும், இதனால் அப்பகுதிவாசிகள் வெளியே செல்லவே அச்சமடைவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அதனால், நேற்று சித்தாமூர்வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசனிடம், ஊராட்சி பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், அடுத்த சில நாட்களில், அனைத்து தெரு விளக்குகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என,தெரிவித்தார்.