/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாமல்லை கழிப்பறைகள் பொது ஏலம் ஒத்திவைப்பு மாமல்லை கழிப்பறைகள் பொது ஏலம் ஒத்திவைப்பு
மாமல்லை கழிப்பறைகள் பொது ஏலம் ஒத்திவைப்பு
மாமல்லை கழிப்பறைகள் பொது ஏலம் ஒத்திவைப்பு
மாமல்லை கழிப்பறைகள் பொது ஏலம் ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 06, 2024 10:30 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தின்கீழ், கடற்கரை கோவில் அருகே, ஆரோவில் குளியலறை மற்றும் கழிப்பறைகள் வளாகம் உள்ளது.
அதேபோல், பேருந்து நிலையம் அருகே துாய்மை பாரத சுகாதார இயக்க கழிப்பறை மற்றும் வெண்ணெய் உருண்டை பாறை, கலங்கரைவிளக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக கழிப்பறைகள் உள்ளன.
பேரூராட்சி நிர்வாகம், ஆண்டுதோறும் பொது ஏலம் நடத்தி, தனியாருக்கு குத்தகைக்கு வழங்கும். லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், ஏலம் நடத்தப்படவில்லை; நிர்வாகமே நடத்தியது.
இந்நிலையில், ஜூலை மாதம் துவங்கி, அடுத்தாண்டு மார்ச் வரை, குத்தகை உரிமம் அளிக்க, நேற்று முன்தினம் பொது ஏலம் நடத்தப்பட்டது.
ஆரோவில் வளாக ஏலத்தில், யாரும் பங்கேற்காமலும், மற்ற கழிப்பறைகள் ஏலத்தை விட ஆரம்ப கேட்பு தொகை அதிகம் என, யாரும் ஏலம் கோராததால் ஒத்திவைக்கப்பட்டதாக, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.