ADDED : ஜூன் 20, 2024 12:09 AM
மதுராந்தகம்:மதுராந்தகம் காவல் எல்லைக்கு உட்பட்ட தண்டரை கிராமம், தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் மகள் பானுமதி, 23.
கடந்த 17ம் தேதி காலை வீட்டிலிருந்து வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். பின், மீண்டும் வீட்டுக்கு வராததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர்,உறவினர்களிடம் விசாரித் துள்ளனர்.
எங்கு தேடியும் கிடைக்காததால், நேற்று மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி வழக்கு பதிவு செய்த மதுராந்தகம் போலீசார், காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.