/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ புறநகரில் கனமழை சாலையில் சரிந்த மரம் புறநகரில் கனமழை சாலையில் சரிந்த மரம்
புறநகரில் கனமழை சாலையில் சரிந்த மரம்
புறநகரில் கனமழை சாலையில் சரிந்த மரம்
புறநகரில் கனமழை சாலையில் சரிந்த மரம்
ADDED : ஜூலை 05, 2024 12:38 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.
மழை துவங்கிய சிறிது நேரத்திலேயே, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் மற்றும் செங்கல்பட்டு மின் வாரிய அலுவலகங்களுக்கு உட்பட்ட பல கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது.
பொத்தேரி -- காவனுார் சாலையில், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் நுழைவு பகுதியில் இருந்த பெரிய மரம் ஒன்று, வேரோடு பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள், மரம் வெட்டும் இயந்திரம் வாயிலாக மரக்கிளைகளை வெட்டி அகற்றி, அப்புறப்படுத்தினர்.
இச்சம்பவம் காரணமாக, அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அருகில் உள்ள மாற்றுப்பாதையில் சென்றனர்.