/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலையில் திடீர் பள்ளம் சென்னேரியில் அபாயம் சாலையில் திடீர் பள்ளம் சென்னேரியில் அபாயம்
சாலையில் திடீர் பள்ளம் சென்னேரியில் அபாயம்
சாலையில் திடீர் பள்ளம் சென்னேரியில் அபாயம்
சாலையில் திடீர் பள்ளம் சென்னேரியில் அபாயம்
ADDED : ஜூன் 26, 2024 12:58 AM

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், ஒரத்தி அடுத்த சென்னேரியில், சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரத்தி -- திண்டிவனம் மாநில நெடுஞ்சாலையில், வடமணிப்பாக்கம் அருகே சென்னேரி ஊராட்சி அமைந்துள்ளது.
இதில், சென்னேரி காளியம்மன் கோவில் அருகே உள்ள சித்தேரி பகுதிக்கு மழை நீர் செல்லும் வகையில், சிறிய பாலம் ஒன்று உள்ளது.
இந்த பாலத்தில், நேற்று திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் வாகனங்களில் செல்வோர் விபத்தில்சிக்குவதை தவிர்க்கும் வகையில், பள்ளத்தின் மீது மரக்கிளைகள் போட்டு, தடுப்பு அமைத்துள்ளனர்.
இதுகுறித்து, சம்பந்தப் பட்ட நெடுஞ்சாலைத்துறையினர், அப்பகுதியினை ஆய்வு செய்து,புதிதாக சிமென்ட் கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.