Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்கையில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த... தனி குழு!

செங்கையில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த... தனி குழு!

செங்கையில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த... தனி குழு!

செங்கையில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த... தனி குழு!

ADDED : ஜூன் 26, 2024 01:09 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முழுமையாக ஒழிக்கவும், தனியார் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால், எத்தனால் ஆகியவை குறித்து ஆய்வு செய்யவும், வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் தனி குழு அமைத்து, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். பள்ளி, கல்லுாரிகளின் அருகில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க, கண்காணிப்பு தீவிரப்ப

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுப்பது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று முன்தினம் கூட்டம் நடந்தது.

இதில், எஸ்.பி., சாய் பிரணீத், சப்- - கலெக்டர் நாராயணசர்மா, கலால் உதவி கமிஷனர் ராஜன்பாபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:

மாவட்டத்தில், முழுமையாக கள்ளச்சாராயத்தை தடுக்க, கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வோர் மற்றும் சில்லரை வியாபாரிகள் குறித்து, உயர் அதிகாரிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இது தொடர்பாக, தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர்கள், சப்- - கலெக்டர் ஆகியோர் கண்காணித்து, வாரத்தில் ஒருநாள் கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கலெக்டருக்கு தெரிவிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள், கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணித்து, வாரத்தில் ஒரு நாள் கூட்டம் நடத்த வேண்டும்.

கள்ளச்சாராயம் விற்பனை செய்தால், அதற்கான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் வாயிலாக ரகசிய தகவல்களை பெற்று, தாசில்தார், போலீசாருக்கு உடனுக்குடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

மாவட்டத்தில், 22 தொழிற்சாலைகளில் மெத்தனால், எத்தனால் ஆகிய மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றைக் கண்காணிக்க, வருவாய் கோட்டாட்சியர்கள், சப்- - கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில், வருவாய், காவல், கலால் ஆகிய துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்து, கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள மருத்துவ ஆய்வாளர்கள், மருந்தகங்கள், மருந்து மொத்த விற்பனை நிலையங்களில், விதிமீறல் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பள்ளி, கல்லுாரிகளின் அருகில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தி சிகிச்சைகாக அனுமதிக்கப்படும் நோயாளிகள் குறித்த தகவலை, டாக்டர்கள் காவல் துறையினருக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

மாவட்டத்தின் எல்லை பகுதிகளை, காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

செய்யூர் தாலுகா, சூணாம்பேடு பகுதியில், டாஸ்மாக் கடை புதிதாக திறக்க ஏற்பாடு செய்ய வேணடும். போதைப்பொருள் பயன்பாடு இல்லாத மாவட்டமாக விளங்கிட, அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., சாய் பிரணீத் பேசியதாவது:

மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க, ஐந்து கிராமங்களுக்கு ஒரு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிகமான கிராமங்கள் உள்ளதால், போலீசார் நேரடியாக கண்காணிப்பது சிரமமாக உள்ளது.

கிராம நிர்வாக அலுவலர்கள், கிராமங்களில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் இயங்கும் பார்களில், வெளிமாநில மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை, டாஸ்மாக் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைவாக நடைபெற்றால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க, கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

புகாா் அளிக்க...

மாநில கட்டுப்பாட்டு எண் 10581மாவட்ட தொலைபேசி எண்1800 4257088வாட்ஸாப் எண்90427 81756பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை, காவல் துறை மதுவிலக்கு பிரிவு கூடுதல் இயக்குனர் கண்காணித்து, நடவடிக்கை எடுப்பார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us