/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஆறுவழிச்சாலை நான்கு முனை சந்திப்பில் எச்சரிப்பு தடுப்பு அமைக்க கோரிக்கை ஆறுவழிச்சாலை நான்கு முனை சந்திப்பில் எச்சரிப்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
ஆறுவழிச்சாலை நான்கு முனை சந்திப்பில் எச்சரிப்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
ஆறுவழிச்சாலை நான்கு முனை சந்திப்பில் எச்சரிப்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
ஆறுவழிச்சாலை நான்கு முனை சந்திப்பில் எச்சரிப்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 25, 2024 05:05 AM

திருப்போரூர் : சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து, சிறுசேரி சிப்காட் வரை ஆறு வழிப்பாதையாக உள்ளது. சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை, நான்கு வழிப்பாதையாக உள்ளது.
இதில், படூர் -- தையூர் இடையே ஒரு புறவழிச் சாலையும், திருப்போரூர் - -ஆலத்துார் இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், படூரில் இருந்து கேளம்பாக்கம் வரை, 90 சதவீத பணிகள் முடிந்து, வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கின்றன.
அதேபோல், திருப் போரூர் பேரூராட்சி காலவாக்கத்திலிருந்து, ஆலத்துார் இடையே 95 சதவீத பணிகள் முடித்து வாகனங்கள் பயணிக்கின்றன.
இதில், திருப்போரூர் -இ.சி.ஆர்., - நெம்மேலி செல்லும் சாலை, ஆறுவழிச்சாலை சந்திக்கும் நான்கு முனை சந்திப்பு இடத்தில், நான்கு புறத்திலும்வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. தினசரிஇச்சாலை வழியாகபல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள்செல்கின்றன.
நான்கு பக்க சாலையிலும் போதிய எச்சரிப்பு தடுப்பு இல்லாததால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலியும், படுகாயமும் ஏற்படுகின்றன.குறிப்பாக, திருப் போரூர்- - நெம்மேலி சாலையில், எந்தவிததடுப்பும் இல்லை.
எனவே, வாகனங்களின் வேகத்தை குறைத்து விபத்தை தடுக்கும் வகையில், நான்கு புறங்களிலும் எச்சரிப்பு தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.