/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அட்டை ஏற்றி வந்த லாரி செங்கை அருகே கவிழ்ந்தது அட்டை ஏற்றி வந்த லாரி செங்கை அருகே கவிழ்ந்தது
அட்டை ஏற்றி வந்த லாரி செங்கை அருகே கவிழ்ந்தது
அட்டை ஏற்றி வந்த லாரி செங்கை அருகே கவிழ்ந்தது
அட்டை ஏற்றி வந்த லாரி செங்கை அருகே கவிழ்ந்தது
ADDED : ஜூலை 12, 2024 01:28 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மேலேரிப்பாக்கம் பகுதியில், தனியார் அட்டை கம்பெனியில் இருந்து பழைய அட்டை மற்றும் இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. வாகனத்தை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முரளி, 29, என்பவர் ஓட்டினார்.
செங்கல்பட்டு அடுத்த வேண்பாக்கம் பகுதியில், மதுராந்தகம் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது. ஓட்டுனர் முரளி நல்வாய்ப்பாக காயமின்றி தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், கிரேன் இயந்திரத்தின் வாயிலாக சரக்கு வாகனத்தை மீட்டனர். அதிக பாரம் ஏற்றி வந்ததே விபத்துக்குக் காரணம் என, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதன் காரணமாக செங்கல்பட்டு- - மதுராந்தகம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.