/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மாடு உரிமையாளர்களிடம் ரூ.68,000 அபராதம் வசூல்மாடு உரிமையாளர்களிடம் ரூ.68,000 அபராதம் வசூல்
மாடு உரிமையாளர்களிடம் ரூ.68,000 அபராதம் வசூல்
மாடு உரிமையாளர்களிடம் ரூ.68,000 அபராதம் வசூல்
மாடு உரிமையாளர்களிடம் ரூ.68,000 அபராதம் வசூல்
ADDED : ஜூன் 09, 2024 01:41 AM
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில், சாலைகளில் திரியும் மாடுகளை பிடிப்பதோடு, அதன் உரிமையாளர்கள் மீது அபராதத்துடன் கூடிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை, சமீபகாலமாக கிடப்பில் போடப்பட்டதால், வழக்கம்போல, அதிக போக்குவரத்து கொண்ட சாலைகளில், மாடுகள் சுற்றித் திரிவது அதிகரித்து விட்டது.
இதனால், விபத்துகளும் அதிகரித்து விட்டன. இந்த நிலையில், மார்ச் 10 முதல் ஜூன் 30ம் தேதி வரை, 74 மாடுகள் சிறைபிடிக்கப்பட்டன. இதில், 34 மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து, 68,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. மீதமுள்ள 40 மாடுகள், கொண்டமங்கலம் கோசாலையில் அடைக்கப்பட்டுள்ளன.
'போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், மாடுகளை சாலைகளில் திரியவிடக் கூடாது என்றும், இந்த நடவடிக்கை தொடரும்' என்றும் நிர்வாகம் அறிவுறுத்திஉள்ளது.