/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஓசியில் 'சைடு டிஸ்' கேட்ட வாலிபர் மீது வழக்கு பதிவு ஓசியில் 'சைடு டிஸ்' கேட்ட வாலிபர் மீது வழக்கு பதிவு
ஓசியில் 'சைடு டிஸ்' கேட்ட வாலிபர் மீது வழக்கு பதிவு
ஓசியில் 'சைடு டிஸ்' கேட்ட வாலிபர் மீது வழக்கு பதிவு
ஓசியில் 'சைடு டிஸ்' கேட்ட வாலிபர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூலை 04, 2024 10:38 PM
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா, 40. அதே பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம், பெட்டி கடைக்கு வந்த செட்டிப்புண்ணியம் கிராமத்தை சேர்ந்த தவக்குமார், 34, என்பவர், பெட்டிக்கடையில் ஓசியில் நொறுக்கு தீனிகள் கேட்டுள்ளார். அதற்கு, அனிதா தர மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, அனிதா பாலுார் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.