/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 80 ஆண்டுகள் பழமையான கிணறு தனியார் புனரமைத்து ஒப்படைப்பு 80 ஆண்டுகள் பழமையான கிணறு தனியார் புனரமைத்து ஒப்படைப்பு
80 ஆண்டுகள் பழமையான கிணறு தனியார் புனரமைத்து ஒப்படைப்பு
80 ஆண்டுகள் பழமையான கிணறு தனியார் புனரமைத்து ஒப்படைப்பு
80 ஆண்டுகள் பழமையான கிணறு தனியார் புனரமைத்து ஒப்படைப்பு
ADDED : மார் 11, 2025 11:29 PM

மாடம்பாக்கம்:தாம்பரம் மாநகராட்சி, ஐந்தாவது மண்டலம், மாடம்பாக்கம், 69வது வார்டு, ஷீரடி சாய் நகர் பகுதியில், மாநகராட்சி பூங்கா உள்ளது.
இப்பூங்காவில், 80 ஆண்டுகள் பழமையான, 30 அடி ஆழம், 40 அடி அகலம் கொண்ட கிணறு உள்ளது. முறையாக பராமரிக்காததால், இந்த கிணறு துார்ந்து காணப்பட்டது.
பழமையான இந்த கிணற்றை துார்வாரி, சீரமைத்து தண்ணீரை தேக்கினால், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என, அப்பகுதி நல்வாழ்வு சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, தனியார் நிறுவனத்தின் வாயிலாக இக்கிணற்றை துார் வாரி, சீரமைக்கும் பணியில் எக்ஸ்னோரா என்ற தனியார் நிறுவனம் ஈடுபட்டது.
தொடர்ந்து, 11 லட்சம் ரூபாய் செலவில், இக்கிணறு, 30 அடி ஆழத்திற்கு துார்வாரி, சீரமைக்கப்பட்டது.
பக்கவாட்டில் கற்களால் பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்து, தற்போது இக்கிணறு முழுமையாக நிரம்பி காணப்படுகிறது.
நேற்று முன்தினம், இக்கிணறு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. மழை காலத்தில் பூங்காவில் தேங்கும் தண்ணீர், இக்கிணற்றுக்கு செல்லும் வகையில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதை பராமரிக்கும் பணி, அப்பகுதி நல்வாழ்வு சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.