Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாநில ஜூனியர் நீச்சல் போட்டி இறுதி நாளில் 4 புது சாதனை

மாநில ஜூனியர் நீச்சல் போட்டி இறுதி நாளில் 4 புது சாதனை

மாநில ஜூனியர் நீச்சல் போட்டி இறுதி நாளில் 4 புது சாதனை

மாநில ஜூனியர் நீச்சல் போட்டி இறுதி நாளில் 4 புது சாதனை

ADDED : ஜூலை 16, 2024 04:26 AM


Google News
Latest Tamil News
சென்னை : மாநில சப் - ஜூனியர் மற்றும் ஜூனியருக்கான நீச்சல் போட்டியில், கடைசி நாளான நேற்று முன்தினம், நான்கு புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.

இதில், திருநெல்வேலி மாவட்ட அணியைச் சேர்ந்த நிதீஷ் சிறுவர்களுக்கான 'குரூப் - 2' பிரிவில் 200 மீ., தனி நபர் மெட்லியில் போட்டி துாரத்தை 2 நிமிடம் 17:20 வினாடிகளிலும், 400 மீ., தனி நபர் மெட்லியில் போட்டி துாரத்தை 4 நிமிடம் 49:58 வினாடிகளில் கடந்து, புதிய சாதனைகளை படைத்தார்.

l சிறுமியருக்கான குரூப் - -1 பிரிவில் 50 மீ., பட்டர்பிளை நீச்சலில் ஆர்கா அணியைச் சேர்ந்த தீக்ஷா சிவகுமார் 30:10 வினாடிகளில் முடித்து புதிய சாதனை படைத்தார்

l குரூப் - 2 சிறுமியருக்கான 200 மீ., பேக்ஸ்ட்ரோக் நீச்சலில் எஸ்.டி.ஏ.டி., சென்னை அணி வீராங்கனை பிரமித்தி ஞானசேகரன், போட்டி துாரத்தை 2 நிமிடம் 27:56 வினாடிகளில் கடந்து புதிய சாதனை நிகழ்த்தினார்.

அனைத்து போட்டிகளின் முடிவில் குரூப் - 1 சிறுவர் பிரிவில் கவின்ராஜும், குரூப் - 2 சிறுவர்கள் பிரிவில் நிதிஷ், ரோனல் ரத்தினம் ஆகியோரும், குரூப் - 3 சிறுவர்கள் பிரிவில் ஆரியா சத்தாரும் தனிநபர் சாம்பியன் பட்டங்களை வென்றனர்.

சிறுமியரில் தீக்ஷா சிவக்குமார், ஸ்ரீநிதி நடேசன், போசிக்கா, சாய் மீரா ஜனார்த்தன் ஜனனி ஆகியோரும் தனிநபர் சாம்பியன் பட்டங்களை வென்றனர்.

சென்னை எஸ்.டி.ஏ.டி., அணி 489 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. எஸ்.டி.ஏ.டி., டால்பின் அணி, 399 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தது.

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க தலைவர் திருமாறன், துணைத் தலைவர் முனியாண்டி உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us