/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குளிர்பான பாட்டிலில் கொக்கு மருந்து அருந்திய 4 சிறுவர்கள் மயக்கம் குளிர்பான பாட்டிலில் கொக்கு மருந்து அருந்திய 4 சிறுவர்கள் மயக்கம்
குளிர்பான பாட்டிலில் கொக்கு மருந்து அருந்திய 4 சிறுவர்கள் மயக்கம்
குளிர்பான பாட்டிலில் கொக்கு மருந்து அருந்திய 4 சிறுவர்கள் மயக்கம்
குளிர்பான பாட்டிலில் கொக்கு மருந்து அருந்திய 4 சிறுவர்கள் மயக்கம்
ADDED : ஜூன் 14, 2024 12:17 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் கடற்கரை பகுதியில், இருளர் குடும்பத்தினர் தங்கியுள்ளனர். இங்கு வசிக்கும் சின்னையன் மகன்கள் ஸ்ரீதர், 5, அய்யனார், 3, விஜய் மகன் சாய்சரண், 5, மகள் காவ்யா, 3, ஆகியோர், கடந்த 11ம் தேதி இரவு, குடிசை அருகில், குளிர்பான பாட்டிலில் இருந்த 'பியூரிடான்' என்ற கொக்கு மருந்தை, குளிர்பானம் என கருதி அருந்தினர்.
மயங்கிய நிலையில் இருந்த அவர்களை, மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் மூவர் குணமடைந்தனர். அய்யனாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக புகார் அளிக்கப்படவில்லை என்றும், அதனால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றும்,மாமல்லபுரம் போலீசார் தெரிவித்தனர்.