/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வாலிபருக்கு கத்திக்குத்து மேலும் 3 பேர் கைது வாலிபருக்கு கத்திக்குத்து மேலும் 3 பேர் கைது
வாலிபருக்கு கத்திக்குத்து மேலும் 3 பேர் கைது
வாலிபருக்கு கத்திக்குத்து மேலும் 3 பேர் கைது
வாலிபருக்கு கத்திக்குத்து மேலும் 3 பேர் கைது
ADDED : ஜூன் 28, 2024 11:52 PM
திருப்போரூர்,:திருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் கிராமத்தைசேர்ந்தவர் கமலக்கண்ணன், 30. இவர், கடந்த 23ம் தேதி, மாலை வெங்கூரில் பணியாற்றி வரும் மனைவியை அழைத்துவர, இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சிலர், கமலக்கண்ணணை மடக்கி, அச்சிறுப்பாக்கம் வனப்பகுதிக்கு அழைத்து சென்று, கத்தியால் தலை, கை பகுதிகளில் வெட்டியுள்ளனர்.
தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று,கமலக்கண்ணனை மீட்டு மருத்துவமனையில்சேர்த்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, மயிலை கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் குமார், 24, என்பவரை கைதுசெய்தனர்.
அதைத்தொடர்ந்து, மேலும் இந்த வழக்கு தொடர்பாக, நேற்று முன்தினம் அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக், 24, ஜெகன், 24, சரவணன், 24, ஆகிய, மூன்று பேரையும் கைது செய்தனர்.