/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/ 12 வயதில் மாயமான மகன் 42ல் திரும்பி இன்ப அதிர்ச்சி 12 வயதில் மாயமான மகன் 42ல் திரும்பி இன்ப அதிர்ச்சி
12 வயதில் மாயமான மகன் 42ல் திரும்பி இன்ப அதிர்ச்சி
12 வயதில் மாயமான மகன் 42ல் திரும்பி இன்ப அதிர்ச்சி
12 வயதில் மாயமான மகன் 42ல் திரும்பி இன்ப அதிர்ச்சி
ADDED : ஜூன் 24, 2025 06:32 AM

அரியலுார்: அரியலுார் அருகே, 12 வயதில் வீட்டைவிட்டு ஓடிய மகன், 30 ஆண்டுகளுக்கு பின் திரும்பியதால், பெற்றோர் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.
அரியலுார் மாவட்டம், காங்கேயம்பேட்டை கிராமத்தை சேர்ந்த கண்ணையன் - ருக்மணி தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இவர்களில் மூத்த மகனான கோவிந்தராஜ், 12 வயதில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறினார்.
பல இடங்களில் தேடியும், கோவிந்தராஜை கண்டுபிடிக்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன் காங்கேயம்பேட்டை கிராமத்தில், கண்ணையன் பெயரை கூறி ஒருவர் விசாரிப்பதாக தகவல் கிடைத்து, கண்ணையன் அங்கு சென்று பார்த்தார். அப்போது, 30 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறிய தன் மகன் கோவிந்தராஜ் தான் அவர் என்பதை அறிந்தார்.
மகிழ்ச்சியடைந்த கண்ணையன், மகனை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மகனை கண்ட தாய் ருக்மணி ஆனந்த கண்ணீர் விட்டார். 12 வயதில் வீட்டை விட்டு ஓடிய கோவிந்தராஜ், சென்னையில் ஒரு டீக்கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
டீக்கடை உரிமையாளரே அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கோவிந்தராஜ் தற்போது, மனைவி, இரு மகள்களுடன், சென்னை வண்ணாரப்பேட்டையில் வசிக்கிறார். காணாமல் போன மகன் திரும்ப வந்ததால், அவரது பெற்றோர், உறவினர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.