/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மூங்கில் பங்கு அதிகம்சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மூங்கில் பங்கு அதிகம்
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மூங்கில் பங்கு அதிகம்
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மூங்கில் பங்கு அதிகம்
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மூங்கில் பங்கு அதிகம்
ADDED : ஜூலை 16, 2024 08:30 AM

பெரம்பலூலூர்: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மூங்கில் பங்கு அதிகம் என சீனா நான்ஜிங் பல்கலைக்கழகத்தின் மூங்கில் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முத்துசாமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: மூங்கில் தாவரம் சுற்றுப் புறச்சூழலை பாதுகாத்து பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துகிறது. மூங்கில் கார்பன் டை ஆக்சைடை சேமிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை குறைக்க உதவுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இணைப் பேராசிரியர்கள் ஜெயக்குமார், தண்டபாணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் தாவரவியல் துறையின் கவுரவ விரிவுரையாளர்கள் ராஜ்குமார், சிவலிங்கம், தாண்டவமூர்த்தி, தமிழ் குமார், ராஜவேல் மற்றும் ஆய்வக உதவியாளர் அஜித் குமார் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.