/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/ 82 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் தேரோட்டத்தை காண ஆவல் 82 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் தேரோட்டத்தை காண ஆவல்
82 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் தேரோட்டத்தை காண ஆவல்
82 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் தேரோட்டத்தை காண ஆவல்
82 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் தேரோட்டத்தை காண ஆவல்
ADDED : மே 30, 2025 02:04 AM

அரியலுார்:அரியலுாரில் 82 ஆண்டுகளுக்கு பின், பெருமாள் கோவில் தேரோட்டம் நடத்துவதற்கான- ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அரியலுார் நகரில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோதண்ட ராமசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தேர் பழுதாகி தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, 18 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வரும் 8ம் தேதி, தேர் வெள்ளோட்டம் நடக்க உள்ளது. இதற்காக, தேருக்கு வார்னிஸ் அடிக்கும் பணி நடந்து வருகிறது. முட்டு கட்டை செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. சுமார் 82 ஆண்டுகளுக்கு பின், அரியலுார் நகரில் வலம் வர உள்ள தேரை காண, பக்தர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.