/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/ நான்காவது சுற்றில் ஜாஸ்மின் * விம்பிள்டன் டென்னிசில் அபாரம் நான்காவது சுற்றில் ஜாஸ்மின் * விம்பிள்டன் டென்னிசில் அபாரம்
நான்காவது சுற்றில் ஜாஸ்மின் * விம்பிள்டன் டென்னிசில் அபாரம்
நான்காவது சுற்றில் ஜாஸ்மின் * விம்பிள்டன் டென்னிசில் அபாரம்
நான்காவது சுற்றில் ஜாஸ்மின் * விம்பிள்டன் டென்னிசில் அபாரம்
UPDATED : ஜூலை 05, 2024 10:27 PM
ADDED : ஜூலை 05, 2024 10:04 PM

லண்டன்: இங்கிலாந்தில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றில், உலகத் தரவரிசையில் 'நம்பர்-7' இடத்திலுள்ள இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினி, கனடாவின் பியான்காவை சந்தித்தார். இதில் ஜாஸ்மின் 7-6, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் எம்மா நவாரோ, ரஷ்யாவின் டயானா ஸ்னைடரை 2-6, 6-3 6-4 என்ற செட்டில் சாய்த்தார்.
மற்றொரு மூன்றாவது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, 7-6, 4-6, 6-4 என, ரஷ்யாவின் கசட்கினாவை சாய்த்தார். இரண்டாவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனை போலந்தின் ஸ்வியாடெக், 6-4, 6-3 என குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சை வென்றார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் ரைபகினா, 6-3, 3-6, 6-3 என ஜெர்மனியில் சீன்மன்ட்டை வென்றார். டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, 6-3, 2-6, 7-5 என கனடாவின் லேலாவை வென்றார்.
ஜிவரேவ் வெற்றி
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவரேவ், 6-2, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் கிரோனை வென்றார்.