Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/வெற்றியுடன் துவக்குமா இந்தியா * பாக்., மண்ணில் பலப்பரீட்சை

வெற்றியுடன் துவக்குமா இந்தியா * பாக்., மண்ணில் பலப்பரீட்சை

வெற்றியுடன் துவக்குமா இந்தியா * பாக்., மண்ணில் பலப்பரீட்சை

வெற்றியுடன் துவக்குமா இந்தியா * பாக்., மண்ணில் பலப்பரீட்சை

ADDED : பிப் 02, 2024 10:22 PM


Google News
Latest Tamil News
இஸ்லாமாபாத்: டேவிஸ் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக 'குரூப் 1' 'பிளே ஆப்' சுற்று, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இன்று துவங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி உலக குரூப் 1ல் பங்கேற்க தகுதி பெறலாம். இந்திய அணி கடைசியாக 1964ல் பாகிஸ்தான் மண்ணில் டென்னிஸ் விளையாடியது.

தற்போது 60 ஆண்டுக்குப் பின் மீண்டும் சென்றுள்ளது. இதற்கான அணியில் 'டாப்-2' இடத்திலுள்ள இந்திய வீரர்கள் சுமித் நாகல், சசிக்குமார் முகுந்த் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாட மறுத்தனர். 'சீனியர்' போபண்ணாவும், டேவிஸ் கோப்பை தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

இந்நிலையில் இன்று நடக்கும் முதல் ஒற்றையர் போட்டியில் உலகத் தரவரிசையில் 461 வது இடத்திலுள்ள இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், 1681 வது இடத்திலுள்ள பாகிஸ்தானின் முஜாமில் மொர்டசா உடன் மோதுகிறார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, அகீல் கானை எதிர்கொள்கிறார். இரட்டையர் போட்டியில் இந்தியா சார்பில் யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடி களமிறங்க காத்திருக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us