Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/இரண்டாவது சுற்றில் வைதேகி

இரண்டாவது சுற்றில் வைதேகி

இரண்டாவது சுற்றில் வைதேகி

இரண்டாவது சுற்றில் வைதேகி

ADDED : ஜூலை 31, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வைதேகி வெற்றி பெற்றார்.

கஜகஸ்தானில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி, கஜகஸ்தானின் கிரிம்கோவா மோதினர்.

முதல் செட்டை வைதேகி 6-0 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட வைதேகி அடுத்த செட்டையும் 6-2 என எளிதாக வசப்படுத்தினார்.

53 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் வைதேகி 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இதில் ரஷ்யாவின் பெடோரோவாவை சந்திக்க உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us