ADDED : மார் 17, 2025 09:28 PM

இந்தியன் வெல்ஸ்: பரிபாஸ் ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் ரஷ்யாவின் ஆன்ட்ரீவா கோப்பை வென்றார்.
அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா மோதினர். அபாரமாக ஆடிய ஆன்ட்ரீவா 2-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார். இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீராங்கனையானார் ஆன்ட்ரீவா (17 வயது). இதற்கு முன், 1999ல் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், தனது 18வது வயதில் பரிபாஸ் ஓபனில் கோப்பை வென்றிருந்தார். தவிர இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றையரில் ஆன்ட்ரீவா கைப்பற்றிய 3வது கோப்பையானது. டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் தரவரிசையில் ஆன்ட்ரீவா, 11வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு முன்னேறினார்.
டிராப்பர் அபாரம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் பிரிட்டனின் ஜாக் டிராப்பர், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் மோதினர். இதில் அசத்திய டிராப்பர் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, தனது முதல் மாஸ்டர்ஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். ஏ.டி.பி., ஒற்றையர் தரவரிசையில் டிராப்பர், 14வது இடத்தில் இருந்து 7வது இடத்தை கைப்பற்றினார்.