Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/பாம்ப்ரி ஜோடி 2வது இடம்

பாம்ப்ரி ஜோடி 2வது இடம்

பாம்ப்ரி ஜோடி 2வது இடம்

பாம்ப்ரி ஜோடி 2வது இடம்

ADDED : ஜூன் 28, 2025 10:36 PM


Google News
Latest Tamil News
மல்லோர்கா: ஸ்பெயினில் ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-4', இந்தியாவின் யூகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, மெக்சிகோவின் கொன்சாலஸ், அமெரிக்காவின் ஆஸ்டின் ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி 1-6 என இழந்தது. இரண்டாவது செட்டை 6-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது. அடுத்து நடந்த 'சூப்பர் டை பிரேக்கர்' 13-13 என இழுபறி ஆனது. கடைசியில் பாம்ப்ரி ஜோடி 13-15 என இழந்தது.

ஒரு மணி நேரம், 21 நிமிடம் நடந்த இப்போட்டியில் பாம்ப்ரி ஜோடி 1-6, 6-1, 13-15 என்ற நேர் கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us