/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/நடாலை வீழ்த்தினார் ஜோகோவிச்: ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையரில்நடாலை வீழ்த்தினார் ஜோகோவிச்: ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையரில்
நடாலை வீழ்த்தினார் ஜோகோவிச்: ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையரில்
நடாலை வீழ்த்தினார் ஜோகோவிச்: ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையரில்
நடாலை வீழ்த்தினார் ஜோகோவிச்: ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையரில்
ADDED : ஜூலை 29, 2024 11:32 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையரில் ஸ்பெயினின் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார். செர்பியாவின் ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரபெல் நடால் மோதினர். இதில் பாரிசில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் 14 முறை கோப்பை வென்ற நடால் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் செட்டை 1-6 என இழந்த நடால், இரண்டாவது செட்டை 4-6 எனக் கோட்டைவிட்டார். முடிவில் நடால் 1-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஜோகோவிச் 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.
டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், பிரான்சின் டயான் பாரி மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-1, 6-1 என மிகச் சுலபமாக வெற்றி பெற்றார். அமெரிக்காவின் கோகோ காப் 6-1, 6-1 என அர்ஜென்டினாவின் மரியா கார்லை வென்றார். இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-4, 6-1 என போலந்தின் மாக்டாவை தோற்கடித்தார்.
மற்ற 2வது சுற்று போட்டிகளில் ஜெர்மனியின் கெர்பர், செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா வெற்றி பெற்றனர். கனடாவின் பியான்கா தோல்வியடைந்தார்.