/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/வெண்கலம் வென்ற பயஸ்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்வெண்கலம் வென்ற பயஸ்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
வெண்கலம் வென்ற பயஸ்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
வெண்கலம் வென்ற பயஸ்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
வெண்கலம் வென்ற பயஸ்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
UPDATED : ஜூலை 14, 2024 12:04 AM
ADDED : ஜூலை 14, 2024 12:02 AM

அமெரிக்காவின் அட்லான்டாவில் 26வது ஒலிம்பிக் போட்டி (1996, ஜூலை 19 - ஆக. 4) நடந்தது. இது, நூற்றாண்டு போட்டியாக கொண்டாடப்பட்டது. இதில் 197 நாடுகளை சேர்ந்த 10320 பேர் (6797 வீரர், 3523 வீராங்கனை) பங்கேற்றனர். விளைளயாட்டு நட்சத்திரங்களின் எண்ணிக்கை முதன்முறையாக ஐந்து இலக்கை தொட்டது. குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார். முதல் 8 நாட்கள் போட்டிகள் சிறப்பாக நடந்த நிலையில், 9வது நாளில் ஒலிம்பிக் நுாற்றாண்டு பார்க்கில் 'பைப்' குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலி, 111 பேர் படுகாயமடைந்தனர்.
டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் 3வது சுற்றில் சுவீடனின் தாமஸ் என்குயிஸ்ட், காலிறுதியில் இத்தாலியின் ரென்சோ பெர்லான் போன்ற முக்கிய வீரர்களை வீழ்த்திய இந்தியாவின் லியாண்டர் பயஸ் அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில் அமெரிக்காவின் அகாசியை சந்தித்தார். அகாசிக்கு கடும் சவால் தந்த போதும் பைனல் வாய்ப்பை தவறவிட்டார் பயஸ். அடுத்து நடந்த 3-4வது இடத்துக்கான போட்டியில் பிரேசிலின் மெலிகெனியை வென்று, இந்தியாவுக்கு வெண்கலம் பெற்று தந்தார் பயஸ்.
போட்டியை நடத்திய அமெரிக்கா 101 பதக்கங்களுடன் (44 தங்கம், 32 வெள்ளி, 25 வெண்கலம்) முதலிடத்தை கைப்பற்றியது. பதக்கப்பட்டியலில் இந்தியா 71வது இடத்தை பகிர்ந்து கொண்டது.