/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா சாம்பியன்டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா சாம்பியன்
ADDED : ஜூன் 25, 2024 10:24 PM

லாகோஸ்: உலக டேபிள் டென்னிஸ் 'கன்டெண்டர்' தொடரில் சாம்பியன் ஆன முதல் இந்தியர் என சாதனை படைத்தார் இந்தியாவின் ஸ்ரீஜா. நைஜீரியாவில் உலக டேபிள் டென்னிஸ் 'கன்டெண்டர்' தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சீனாவின் டிங் இயை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீஜா 4-1 (10-12, 11-9, 11-6, 11-8, 11-6) என சாம்பியன் ஆனார். இதையடுத்து உலக டேபிள் டென்னிஸ் 'கன்டெண்டர்' தொடரில் கோப்பை வென்ற முதல் இந்தியர் ஆனார்.
பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் ஸ்ரீஜா-அர்ச்சனா, யாஷஸ்வினி-தியா பராக் ஜோடி மோதின. இதில் ஸ்ரீஜா-அர்ச்சனா ஜோடி 3-0 (11-9, 11-6, 12-10) என வென்று சாம்பியன் ஆனது.
ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் மானவ் விகாஷ், ஹர்மீத் தேசாய் ஜோடி, 3-0 (11-8, 11-9, 11-8) என நைஜீரியாவின் அஜீஸ், ஒலாஜிடு ஜோடியை வென்று கோப்பை கைப்பற்றியது.