/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ நான்காவது தங்கம் வென்றார் நோவா லைல்ஸ் நான்காவது தங்கம் வென்றார் நோவா லைல்ஸ்
நான்காவது தங்கம் வென்றார் நோவா லைல்ஸ்
நான்காவது தங்கம் வென்றார் நோவா லைல்ஸ்
நான்காவது தங்கம் வென்றார் நோவா லைல்ஸ்
ADDED : செப் 19, 2025 11:26 PM

டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து நான்காவது தங்கம் கைப்பற்றினார் நோவா லைல்ஸ்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், உலக தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 200 மீ., ஓட்ட பைனல் நடந்தது. அமெரிக்காவின் நோவா லைல்ஸ் (19.52) தங்கம் வென்றார். இது, உலக தடகளம் 200 மீ., ஓட்டத்தில் தொடர்ந்து இவர் வென்ற நான்காவது தங்கம் (2019, 2022, 2023, 2025). அமெரிக்காவின் கென்னெத் (19.58), ஜமைக்காவின் பிரியான் (19.64) அடுத்த இரு இடம் பெற்றனர்.
பெண்களுக்கான 200 மீ., ஓட்டம் பைனல் நேற்று நடந்தது. அமெரிக்காவின் மெலிஸ்சா ஜெபர்சன்(21.68 வினாடி) முதலிடம் பிடித்தார். ஏற்கனவே 100 மீ., ஓட்டத்தில் அசத்திய இவர், உலக தடகளத்தில் 2வது தங்கம் வென்றார். பிரிட்டனின் அமி ஹன்ட் (22.14), ஜமைக்காவின் ஷெரிக்கா (22.18) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.