Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

ADDED : செப் 11, 2025 09:33 PM


Google News
Latest Tamil News
ஜெர்மனி கலக்கல்

ரிகா: லாட்வியாவில் நடக்கும் 'யூரோ' கூடைப்பந்து காலிறுதியில் ஜெர்மனி, சுலோவேனியா அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 99-91 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதியில் பின்லாந்து அணி 93-79 என ஜார்ஜியாவை வீழ்த்தியது. அரையிறுதியில் ஜெர்மனி, பின்லாந்து அணிகள் மோதுகின்றன.

எகிப்து ஆதிக்கம்

ஓரன்: அல்ஜீரியாவில் நடக்கும் ஆப்ரிக்க பெண்கள் ஜூனியர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் எகிப்து அணி 26-22 என்ற கணக்கில் துனிசியாவை வீழ்த்தி, 4வது வெற்றியை பெற்றது. ஜாம்பியா அணி 22-42 என, துனிசியாவிடம் தோல்வியடைந்தது.

கவலை இல்லை: போல்ட்

டோக்கியோ: கடந்த 2009ல் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஜமைக்காவின் உசைன் போல்ட், 100 மீ., (9.58 வினாடி), 200 மீ., (19.19 வினாடி) ஓட்டத்தில் உலக சாதனை படைத்தார். 16 ஆண்டுகளாக இவரது சாதனை நீடிக்கிறது. நாளை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக தடகளம் துவங்குகிறது. இதில் போல்ட் சாதனை முறியடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. போல்ட் கூறுகையில், ''தற்போதுள்ள வீரர்கள் எனது சாதனையை முறியடித்தால், நான் கவலைப்பட போவதில்லை,'' என்றார்.

எக்ஸ்டிராஸ்

* சுவிட்சர்லாந்தில் இன்று துவங்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ், 'வேர்ல்டு குரூப்-1' போட்டியில் இந்தியா, சுவிட்சர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்தியா சார்பில் ஒற்றையரில் சுரேஷ், சுமித் நாகல், இரட்டையரில் ரோத்விக், ஸ்ரீராம் பாலாஜி பங்கேற்கின்றனர்.

* சீனாவில் நடக்கும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் ரைபிள்' தகுதிச் சுற்றில் ஏமாற்றிய இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் (630.0 புள்ளி), உமாமகேஷ் (627.7), நீரஜ் குமார் (626.1) பைனல் வாய்ப்பை இழந்தனர்.

* பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் லீக் ('கிளப்') கால்பந்து தொடரில், இந்தியாவின் ஈஸ்ட் பெங்கால் அணி, வுஹான் ஜியாங்டா (சீனா), பாம் காட்டூன் (ஈரான்), நாசாப் (உஸ்பெகிஸ்தான்) அணிகளுடன் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.

* தோள்பட்டை காயத்தால் ஆஸ்திரேலியா 'ஏ' அணியின் 'ஆல்-ரவுண்டர்' ஆரோன் ஹார்டி, இந்திய தொடரில் (செப். 16 - அக். 5) இருந்து விலகினார். இவருக்கு பதிலாக வில் சதர்லாந்து தேர்வானார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us