Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

ADDED : செப் 10, 2025 10:43 PM


Google News
Latest Tamil News
அரையிறுதியில் துருக்கி

ரிகா: லாட்வியாவில் நடக்கும் 'யூரோ' கூடைப்பந்து காலிறுதியில் துருக்கி அணி 91-77 என்ற கணக்கில் போலந்தை வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில் கிரீஸ் அணி 87-76 என லிதுவேனியாவை வென்றது. அரையிறுதியில் துருக்கி, கிரீஸ் அணிகள் மோதுகின்றன.

அமெரிக்கா அசத்தல்

கொலம்பஸ்: அமெரிக்காவில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் அமெரிக்க அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதன்மூலம் உலகின் 'டாப்-25' அணிகளுக்கு எதிராக கடந்த 7 போட்டிகளில் வெற்றி பெற முடியாமல் தவித்த அமெரிக்காவுக்கு முதல் வெற்றி கிடைத்தது.

ரசிகர்களுக்கு 'நோ'

ஹாலிபாக்ஸ்: நோவா ஸ்கோடியாவில் (செப். 12-13) நடக்கவுள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப்-1' போட்டியில் கனடா, இஸ்ரேல் அணிகள் விளையாடுகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

'காஸ்ட்லி' வீரர்கள்

ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள 'எஸ்.ஏ.,20' லீக் 4வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் தென் ஆப்ரிக்காவின் பிரவிஸ் (ரூ. 8.3 கோடி, பிரிட்டோரியா), மார்க்ரம் (ரூ. 7 கோடி, டர்பன்) அதிக விலைக்கு ஒப்பந்தமாகினர். இதற்கு முன், 2022ல் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ஈஸ்டர்ன் கேப்), ரூ. 4.6 கோடிக்கு வாங்கப்பட்டதே அதிகம்.

எக்ஸ்டிராஸ்


* டில்லியில் நடக்கும் தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 'ரவுண்டு-16' போட்டியில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணியின் ஹர்மீத் தேசாய் 3-2 என, தமிழகத்தின் தருண் சண்முகத்தை வீழ்த்தினார். மற்ற போட்டிகளில் சத்யன் ஞானசேகரன், தியா, பயாஸ் ஜெயின் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

* பெங்களூருவில் இன்று துவங்கும் துலீப் டிராபி கிரிக்கெட் பைனலில் தெற்கு, மத்திய மண்டல அணிகள் விளையாடுகின்றன.

* தென் கொரியாவில் நடக்கும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் 'ரிகர்வ்' பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கதா அடங்கிய இந்திய பெண்கள் அணி 3-5 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வியடைந்தது.

* சீனாவில் நடக்கும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தகுதிச் சுற்றில் ஏமாற்றிய இந்தியாவின் சாம்ராட் ராணா (582.20 புள்ளி), அமித் சர்மா (576.18), நிஷாந்த் ரவாத் (568.11) பைனலுக்கு தகுதி பெறத்தவறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us