/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உலக 'பவர்லிப்டிங்': லலித் 3 'தங்கம்'உலக 'பவர்லிப்டிங்': லலித் 3 'தங்கம்'
உலக 'பவர்லிப்டிங்': லலித் 3 'தங்கம்'
உலக 'பவர்லிப்டிங்': லலித் 3 'தங்கம்'
உலக 'பவர்லிப்டிங்': லலித் 3 'தங்கம்'
ADDED : மே 31, 2025 09:40 PM

பட்டாயா: உலக 'பவர்லிப்டிங்' போட்டியில் இந்தியாவின் லலித் படேல், 3 தங்கம் வென்றார்.
குஜராத்தை சேர்ந்தவர் லலித் படேல். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தான் பவர்லிப்டிங் போட்டியில் களமிறங்கினார். சைவ உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் இவர், 56 வயதிலும் அசராமல் எடை துாக்கி அசத்துகிறார்.
தாய்லாந்தில் நடந்த உலக 'பவர்லிப்டிங்' சாம்பியன்ஷிப் போட்டியில் லலித் பங்கேற்றார். மாஸ்டர்ஸ் பிரிவில் (83-93 கிலோ) இதில் 'பென்ச் பிரஸ்', 'டெட்லிப்ட்', 'ஸ்குவாட்' என 3 பிரிவிலும் முதலிடம் பிடித்த இவர், 3 தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதுவரை 16 மாவட்ட, 18 மாநில, 12 தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்றுள்ளார்.
இதுகுறித்து லலித் படேல் கூறுகையில், ''ஒருவரது வெற்றிக்கு வயது, உணவு முறை தடையில்லை. இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறேன். 'பாடிபில்டிங்' போட்டியில் பங்கேற்கவும் ஆர்வமாக உள்ளேன்,'' என்றார்.