ADDED : ஜூன் 11, 2024 10:24 PM

காந்திநகர்: ஜூனியர் உலக செஸ் சாம்பியன்ஷிப் 9வது சுற்றில் வெற்றி பெற்ற திவ்யா, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
குஜராத்தில் ஜூனியர் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான பிரிவில் 101 பேர் பங்கேற்கின்றனர். 9வது சுற்றில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், சக வீராங்கனை ரக்சித்தாவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய திவ்யா, போட்டியின் 42 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்ற போட்டிகளில் இந்தியாவின் ரிந்தியா, சச்சி, அனுபம், கீர்த்தி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். ஒன்பது சுற்றில் 7 வெற்றி, 2 'டிரா' செய்த திவ்யா, 8.0 புள்ளியுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆர்மேனியாவின் மரியம் (7.5), இரண்டாவதாக உள்ளார். அஜர்பெய்ஜானின் அலாவெர்டியேவா (6.5), ரக்சித்தா (6.5) உட்பட 4 பேர் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.