ADDED : ஜூன் 09, 2025 10:56 PM

ஹனோய்: ஆசிய வாலிபால் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான நேஷன்ஸ் கோப்பை தொடர் வியட்நாமில் நடக்கிறது.
இந்தியா உட்பட மொத்தம் 11 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் ஹாங்காங்கிடம் கடைசி நேரத்தில் வீழ்ந்த இந்தியா, நேற்று இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்தியா 25-18 என வென்றது. பின் ஏமாற்றிய இந்திய பெண்கள் அடுத்த இரு செட்டையும் 20-25, 19-25 என நழுவவிட்டனர். நான்காவது செட்டில் போராடிய போதும் 23-25 என பறிபோனது. முடிவில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.