Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா அகுலா அசத்தல்

டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா அகுலா அசத்தல்

டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா அகுலா அசத்தல்

டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா அகுலா அசத்தல்

ADDED : ஜூலை 31, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' சுற்றுக்கு இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா முன்னேறினார்.

பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சிங்கப்பூரின் ஜியான் ஜெங் மோதினர். இதில் ஸ்ரீஜா அகுலா 4-2 (9-11, 12-10, 11-4, 11-5, 10-12, 12-10) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ராவுக்கு பின், 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறிய 2வது இந்தியரானார் ஸ்ரீஜா. இந்த வெற்றி நேற்று, தனது 26வது பிறந்த நாள் கொண்டாடிய ஸ்ரீஜாவுக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்தது.

மணிகா பத்ரா ஏமாற்றம்: டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா, ஜப்பானின் மியு ஹிரானோ மோதினர். இதில் ஏமாற்றிய மணிகா 1-4 (6-11, 9-11, 14-12, 8-11, 6-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us