ADDED : பிப் 24, 2024 09:35 PM

டொரன்டோ: சாலஞ்சர் டூர் ஸ்குவாஷ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் அபே சிங் முன்னேறினார்.
கனடாவின் டொரன்டோவில் சேலஞ்சர் டூர் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்தியாவின் அபே சிங், எகிப்தின் அப்தெல்ரஹ்மான் அப்தெல்கலெக் மோதினர். முதல் செட்டை 11-5 எனக் கைப்பற்றிய அபே சிங் அடுத்த செட்டை 6-11 என இழந்தார். பின் எழுச்சி கண்ட இவர் அடுத்த இரு செட்களை 11-7, 11-6 என தன்வசப்படுத்தினார்.
முடிவில் அபே சிங் 3-1 (11-5, 6-11, 11-7, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். இதன்மூலம் இந்த ஆண்டு 2வது முறையாக சாலஞ்சர் டூர் ஸ்குவாஷ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார் அபே சிங். கடந்த ஜனவரி மாதம் மும்பையில் நடந்த சால்ஞசர் டூர் தொடரில் கோப்பை வென்றிருந்தார்.
பைனலில் அபே சிங், வேல்சின் எலியாட் மோரிஸ் தேவ்ரெட் மோதுகின்றனர்.