/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/துப்பாக்கிசுடுதல்: சுமேதா 'தங்கம்'துப்பாக்கிசுடுதல்: சுமேதா 'தங்கம்'
துப்பாக்கிசுடுதல்: சுமேதா 'தங்கம்'
துப்பாக்கிசுடுதல்: சுமேதா 'தங்கம்'
துப்பாக்கிசுடுதல்: சுமேதா 'தங்கம்'
ADDED : ஜூன் 02, 2025 10:53 PM

சங்வான்: தென் கொரியாவில் உலக கோப்பை பாரா துப்பாக்கிசுடுதல் போட்டி நடந்தது. பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்குப் பின் நடந்த முதல் 'உலக' தொடரான இதில் 26 நாடுகளில் இருந்து 192 நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ருபினா (566 புள்ளி), சுமேதா (565), ஷிர்ஸ்டி (564) இணைந்து 'டாப்-3' இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.
அடுத்து நடந்த பைனலில் சிறப்பாக செயல்பட்ட சுமேதா, 235.2 புள்ளி எடுத்து, முதலிடம் பெற்று தங்கம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை ஷிர்ஸ்டி (234.9) வெள்ளிப்பதக்கம் வென்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ருபினாவுக்கு (132.5) 7வது இடம் தான் கிடைத்தது.
ஆண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டி நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் ருத்ரான்ஷ், 236.3 புள்ளி எடுத்து, தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். மற்றொரு இந்திய வீரர் மணிஷ் நார்வல் (236.0) வெள்ளி கைப்பற்றினார்.