/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/புரோ கபடி லீக்: புனே, உ.பி., அணிகள் வெற்றிபுரோ கபடி லீக்: புனே, உ.பி., அணிகள் வெற்றி
புரோ கபடி லீக்: புனே, உ.பி., அணிகள் வெற்றி
புரோ கபடி லீக்: புனே, உ.பி., அணிகள் வெற்றி
புரோ கபடி லீக்: புனே, உ.பி., அணிகள் வெற்றி
ADDED : செப் 01, 2025 11:00 PM

விசாகப்பட்டனம்: புரோ கபடி லீக் போட்டியில் அசத்திய புனே, உ.பி., அணிகள் வெற்றி பெற்றன.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. தமிழ் தலைவாஸ், மும்பை உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் பாட்னா, உ.பி., அணிகள் மோதின. உ.பி., அணியினரை 'ஆல்-அவுட்' செய்த பாட்னா அணி, முதல் பாதி முடிவில் 19-13 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட உ.பி., அணியினர், ஹரியானா வீரர்களை 'ஆல்-அவுட்' செய்து பதிலடி கொடுத்தனர். ஆட்டநேர முடிவில் உ.பி., அணி 34-31 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. உ.பி., அணிக்கு ககன் கவுடா (7 புள்ளி), அஷு சிங் (5), பவானி ராஜ்புட் (5), கேப்டன் சுமித் (5) கைகொடுத்தனர். பாட்னா சார்பில் அயன் 9, மனிந்தர் சிங் 7 புள்ளி பெற்றனர்.
மற்றொரு லீக் போட்டியில் புனே, குஜராத் அணிகள் மோதின. இதில் புனே அணி 41-19 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.