/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஹாக்கி: இந்திய அணி வெற்றி * வீழ்ந்தது ஜெர்மனிஹாக்கி: இந்திய அணி வெற்றி * வீழ்ந்தது ஜெர்மனி
ஹாக்கி: இந்திய அணி வெற்றி * வீழ்ந்தது ஜெர்மனி
ஹாக்கி: இந்திய அணி வெற்றி * வீழ்ந்தது ஜெர்மனி
ஹாக்கி: இந்திய அணி வெற்றி * வீழ்ந்தது ஜெர்மனி
ADDED : ஜூன் 01, 2024 11:19 PM

லண்டன்: புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 3-0 என ஜெர்மனியை வீழ்த்தியது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று லண்டனில் நடந்த போட்டியில் உலகத் தரவரிசையில் 6வதாக உள்ள இந்தியா, 4வது இடத்திலுள்ள ஜெர்மனி அணிகள் மோதின.
போட்டியின் 16 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதை வீணாக்காத கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், கோலாக மாற்றினார். முதல் பாதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 41 வது நிமிடத்தில் இந்தியாவின் சுக்ஜீத் சிங், தன் பங்கிற்கு ஒரு பீல்டு கோல் அடித்தார். அடுத்த 3வது நிமிடத்தில் இந்திய அணியினர் மீண்டும் அசத்தினர். இம்முறை குர்ஜந்த் சிங் (44வது) ஒரு கோல் அடித்தார். கடைசி நேரத்தில் அடுத்தடுத்து நான்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்த போதும், ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்க முடியவில்லை.
முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.
2வது இடம்
இந்திய அணி இதுவரை மோதிய 13 போட்டியில் 8 வெற்றி, 5 தோல்வியுடன் 24 புள்ளி பெற்று, பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரு இடத்தில் நெதர்லாந்து (26), அர்ஜென்டினா (26) உள்ளன. ஜெர்மனி (8) 6வது இடத்தில் உள்ளது.