Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஹாக்கி: காலிறுதியில் இந்திய அணி

ஹாக்கி: காலிறுதியில் இந்திய அணி

ஹாக்கி: காலிறுதியில் இந்திய அணி

ஹாக்கி: காலிறுதியில் இந்திய அணி

ADDED : ஜூலை 30, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கியில் காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. நேற்று நடந்த லீக் போட்டியில் 2-0 என அயர்லாந்தை வீழ்த்தியது.

ஒலிம்பிக் ஹாக்கியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. இந்திய அணி 'பி' பிரிவில் நியூசிலாந்து, அர்ஜென்டினா, அயர்லாந்து, நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஆஸ்திரேலியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

முதல் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, இரண்டாவது போட்டியில் அர்ஜென்டினாவுடன் டிரா செய்தது. நேற்று தனது மூன்றாவது போட்டியில் அயர்லாந்தை எதிர்கொண்டது.

போட்டி துவங்கிய 2வது நிமிடம் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' கிடைத்தது. இதை ஹர்மன்பிரீத் சிங் வீணடித்தார். 11 வது நிமிடம் இந்தியாவுக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' கிடைத்தது. வாய்ப்பை பயன்படுத்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், கோல் அடித்து அசத்தினார். 19வது நிமிடம் கிடைத்த மற்றொரு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில், ஹர்மன்பிரீத் சிங், மீண்டும் கோல் அடித்தார். இத்தொடரில் இவர் அடித்த 4வது கோல் இது.

34வது நிமிடம் இந்தியாவுக்கு கிடைத்த அடுத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பை, அமித ரோஹிதாஸ், ஹர்மன்பிரீத் சிங் வீண்டித்தனர். 50 வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங்கிற்கு 'கிரீன் கார்டு' காட்டப்பட, 2 நிமிடம் வெளியேறினார். இந்தியா 10 வீரர்களுடன் விளையாடியது. இருப்பினும் அயர்லாந்து தாக்குதலை சமாளித்த இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்று இந்தியாவுக்கு 9 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தன. இதில் ஒன்றை மட்டும் கோலாக மாற்றினர். 8 வாய்ப்பை வீணடித்தனர். தற்போது 3 போட்டியில் 2 வெற்றி, 1 டிரா செய்த இந்தியா, 7 புள்ளி எடுத்து, 'டாப்-4' இடத்தை உறுதி செய்து, காலிறுதிக்கு முன்னேறியது. நாளை தனது நான்காவது போட்டியில் நடப்பு சாம்பியன் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.பு

சபாஷ் ஸ்ரீஜேஷ்

அயர்லாந்து அணிக்கு நேற்று 5 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தன. இவை அனைத்தையும் சிறப்பாக தடுத்து, இந்திய அணி வெற்றிக்கு கைகொடுத்தார் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us