/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பைனலில் மும்பை-ஜெய்ப்பூர்: அல்டிமேட் டேபிள் டென்னிசில் மோதல்பைனலில் மும்பை-ஜெய்ப்பூர்: அல்டிமேட் டேபிள் டென்னிசில் மோதல்
பைனலில் மும்பை-ஜெய்ப்பூர்: அல்டிமேட் டேபிள் டென்னிசில் மோதல்
பைனலில் மும்பை-ஜெய்ப்பூர்: அல்டிமேட் டேபிள் டென்னிசில் மோதல்
பைனலில் மும்பை-ஜெய்ப்பூர்: அல்டிமேட் டேபிள் டென்னிசில் மோதல்
ADDED : ஜூன் 14, 2025 11:17 PM

ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் மும்பை அணி, கோவா அணியை வீழ்த்தியது. பைனலில் மும்பை, ஜெய்ப்பூர் அணிகள் மோதுகின்றன.
ஆமதாபாத்தில் (குஜராத்) அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. முதல் அரையிறுதியில் ஜெய்ப்பூர் அணி, டில்லியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. நேற்று நடந்த 2வது அரையிறுதியில் கோவா, மும்பை அணிகள் மோதின.
ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் கோவாவின் ஹர்மீத் தேசாய் 3-0 என, மும்பையின் லிலியன் பார்டெட்டை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் பெர்னாடெட் சோக்ஸ் (மும்பை) 2-1 என ஜெங் ஜியானை (கோவா) வென்றார். கலப்பு இரட்டையர் போட்டியில் மும்பையின் பெர்னாடெட் சோக்ஸ், ஆகாஷ் பால் ஜோடி 2-1 என கோவாவின் ஜெங் ஜியான், ஹர்மீத் தேசாய் ஜோடியை தோற்கடித்தது.
ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் விடோர் இஷி (கோவா) 2-1 என அபினந்த்தை (மும்பை) வென்றார். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் யாஷஸ்வினி (மும்பை) 3-0 என கிரித்விகா சின்ஹா ராயை (கோவா) வீழ்த்தினார்.
முடிவில் மும்பை அணி 8-7 என 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. கோவா அணி 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைக்க தவறியது.